பதிவுகள் மன்றத்தின் இரண்டாம் பதிவு




  • தமிழ் எழுத்துக்களின் பிறப்புகளை தமிழ் இலக்கணங்களையும், மொழியியலையும் ஒப்பிட்டு உரைத்தார்.
  • சண்டிகேசுவரர் சந்நிதியில் ஏன் கைதட்டுகிறோம் என்று உரைத்தார்.
  • கோயிலில் ஏன் மணியடிக்கிறார்கள்?
  • வெற்றிலையில் பின்புறம் ஏன் சுண்ணாம்பு தடவுகிறார்கள்? போன்ற மரபு சார்ந்த பல்சுவைச் செய்திகளையும் எடுத்துரைத்தார்
  • இதழியலின் தோற்றம், முதல் அச்சு இயந்திரம், முதல் செய்தித்தாள் என பல அரிய செய்திகளை எடுத்துரைத்தார்.
  • உலகில் உள்ள மொத்த மொழிகள்: 6760
  • இந்தியாவில் உள்ள மொத்த மொழிகள்: 1652

  • திராவிடமொழிகள்
இலக்கியத்திறன் உடையன:
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்.
இலக்கியத்திறன் இல்லாதன:
துளு, படகா, கோடா, தோடா, கொடகு, கோண்டி,
கோண்டா, குயி, குரூக், மால்டோ, பிராகுயி.

தென் திராவிட மொழிகள்
துளு, படகா, கன்னடம், கோடா,
தோடா, கொடகு, மலையாளம், தமிழ்;.

நடு திராவிட மொழிகள்
தெலுங்கு, கோண்டி, கோண்டா,
குயி, குவி, பெங்கோ, மண்டா.

வட திராவிட மொழிகள்
குரூக், மால்டோ, பிராகுயி.

  • ஒலியுறுப்புகள்

  • பொதுப்பிறப்பு

உந்தி (வயிறு), தலை, மிடறு, நெஞ்சு
பல் - இதழ்- நா- மூக்கு

“உந்தி முதலா முந்து வளித் தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
……..
(தொல். 83)
உயிர் எழுத்துகளின்
பொதுப்பிறப்பு
(மிடறு - கழுத்து)

“அவ்வழிப்
பன்னீர் உயிரும் தம்நிலை திhpயா
மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்”
(தொல்.84)
அகர ஆகாரம்

அங்காந்து பிறக்கும்
(வாயைத்திறக்கும் அளவில் பிறக்கும்)

“அவற்றுள்
அஆ ஆயிரண்டும் அங்காந்து இயலும்”
(தொல் 85)

இ,ஈ,எ,ஏ,ஐ
அகர ஆகாரத்துடன் ஒருதன்மையன
அண்பல்லை அடிநாவின் விளிம்பு சென்று பொருந்தப்பிறக்கும்

“இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் அவற்றோ ரன்ன
அவைதாம்
அண்பல் முதல்நா விளிம்புறல் உடைய”
(தொல்.86)
உ, ஊ, ஒ, ஓ, ஔ

இதழ்கள் குவிந்து பிறக்கும்
“உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் இதழ்குவிந்து இயலும்”
(தொல்.87)
  • இதழியலின் தந்தை ஜூலியஸ் சீசர்
 — ரோம்நாட்டை ஆண்டவர்
— கி.மு 6 ஆம் நூற்றாண்டில் அரண்மனைச் செய்திகளைப் பொது இடத்தில்
ஆக்டா டையானா என்ற பெயாpல் எழுதிவைத்தார். இது பின்னர்
இதழியல் வளரக் காரணமாகியது
காகிதம் - அச்சுக்கலை
— காகிதத்தை முதன்முதலில் கண்டறிந்தவர்கள் சீனர்கள்
— கி.பி.105 இல் மல்பொp என்ற மரப்பட்டையில் இருந்து காகிதத்தை உருவாக்கினர்
— அச்சு இயந்திரத்தை முதன்முதலில் கண்டறிந்தவர்கள் ஜெர்மனியர்
— கி.பி.1450 இல் ஜான் கூடன்பர்க் அச்சுஇயந்திரத்தை உருவாக்கினர்
இந்தியாவில் இதழியல்
— 1713 இல் தரங்கம்பாடியில்
வேதநூல் வெளியிடுதல்
— 1715 இல் பொறையாறில்
வேதநூல் வெளியிடுதல்
— இந்தியாவில் முதல் செய்தித்தாள்:
— 1780 இல் ஜேம்ஸ்அகஸ்டஸ் ஹிக்கி வெளியி;ட்டார்
— பெங்கால் கெஜட் (ஜனவாp 29)
இந்தியாவில் அரசிதழ்
— 1785 இல் ரிச்சர்ட் ஜான்சனின்
சென்னை கூரியர்

  • தமிழ்ச் சொல் அறிவோம்

அகராதி - அகரவாpசை
அகாலமரணம் - முதிராச் சாவு
அகிம்சை - இன்னாசெய்யாமை
அசுத்தம் - துப்புரவின்மை
அதிகம் - மிகுதி
அதிசயம் - புதுமை
ஆசனம் - இருக்கை
தினசாp - நாள்தோறும்
பாதை - வழி
வீரர் - மள்ளர், மறவர்