24.07.13 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் உயிர்த்தொழில்நுட்பத்துறை விரிவுரையாளர் திரு. எம்.ஆர்த்தி அவர்கள் “இசையும் மனிதவாழ்வியலும்” என்ற தலைப்பில் தம் கருத்துக்களைப் பதிவு செய்தார்.


  • ஒலி, ஒலிபரவல், ஒலியின் அளவு, ஒலியின் தரம் ஆகியவற்றை அறிவியல் அடிப்படையில் விளக்கினார்,
  •  இசையென்றால் என்ன? என்று விளக்கி, குறள், புறப்பாடல்களில் இடைம்பெற்ற இசைகுறித்த செய்திகளை எடுத்துரைத்தார்.
  • குழலும் கிருஷ்ணனும், உடுக்கையும் சிவனும், வீணையும் சரசுவதியும் என கடவுளரோடு இருக்கும் இசைக்கருவிகளின் மரபுகுறித்துப் பேசினார்.
  • நரம்பு, துளை, தோல், சலதரங்கம், போன்ற இசைக்கருவிகளின் வளர்ச்சிகுறித்தும் இசைமருத்துவம் குறித்தும் அழகாகச் சொன்னார்.
  • மனஅழுத்தம் நீங்க இசை எவ்வாறு பயன்படுகிறது என்பதை நன்றாக எடுத்துரைத்தார். பேராசிரியர்களும் தம் இசைகுறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.